போதைப்பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு


போதைப்பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
x

போதைப்பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில் போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே மது அருந்துதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் அவர் நீங்கள் அனைவரும் போதைப்பொருட்கள் உபயோகம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும், என்றார்.


Next Story