'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு


ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
x

நெமிலி அருகே ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சயனபுரம் ஊராட்சி, பழைய கண்டிகை கிராமத்தில் நெமிலி போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வாகன ஒட்டிகளிடம் கூறுகையில், ஹெல்மெட் அணிவதால் சாலை விபத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ளமுடியும். மனித உயிர் விலைமதிப்பற்றது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிவேக பயணம் செய்யக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது. முறையாக அனைத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் இருக்கவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று கூறினார்.


Next Story