வேளாண்மை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு


வேளாண்மை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
x

வேளாண்மை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கரூர்

குளித்தலை வட்டம் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் தமிழக அரசு அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய நங்கவரம் பேரூராட்சி குறிச்சி, சூரியனூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

இதில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பட்டா ஆகிய ஆவண நகல்கள் மற்றும் விவசாயிகளின் புகைப்படம், கைபேசி எண் ஆகியவைகளை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்களிடம் சென்று பதிவு செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் வேளாண்மை வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வேந்திரன், கிராம நிர்வாக அதிகாரி பழனிவேல் ராஜன், வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story