சுற்றுச்சூழல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு


சுற்றுச்சூழல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 7 Jun 2023 2:00 AM IST (Updated: 7 Jun 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை துறை சார்பில் சுற்றுச்சூழல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

வேளாண்மை துறை சார்பில் சுற்றுச்சூழல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் தின விழா

பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண்மை துறையின் வேளாண்மை தொழில்நுட்ப முகமை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கஞ்சம்பட்டியில் நடைபெற்றது. விழாவிற்கு உதவி இயக்குனர் நாகபசுபதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பதாகும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பயன்படுத்துவதை பொதுமக்கள், விவசாயிகள் தவிர்க்க வேண்டும். மேலும் நீடித்த நிலையான வேளாண்மையை மேற்கொள்ள இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

அங்கக வேளாண்மை

இதை தொடர்ந்து ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்செல்வன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், அங்கக வேளாண்மை முக்கியத்துவம் மற்றும் அங்கக வேளாண்மையில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்ப உத்திகளான பசுந்தாள் உரப்பயிர்கள், பயிரிடுதல், தொழுஉரங்கள் பயன்படுத்துதல், ரைசோபியம், அசோஸ்பைரில்லம், டாஸ்வோலேக்டிரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்துதல் மிக அவசியம் என்றார்.

இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி, வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் தீபிகா, உதவி வேளாண்மை அலுவலர் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி, அட்மா தொழில்நுட்ப திட்ட மேலாளர்கள் நாகநந்தினி, ராதா ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story