போக்குவரத்து விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு


போக்குவரத்து விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
x

போக்குவரத்து விதிகள் குறித்துவாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், பெரம்பலூர் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையிலான போலீசார் தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்றும், சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கினால் விபத்துகளை தவிர்த்து விடலாம், என்றனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story