பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி 'கல்வியும் காவலும்' என்ற பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையம் மற்றும் பள்ளிகளில் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது. அதன்படி மாவட்டம் முழுவதும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுகள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், ஏரி, குளம், ஆறு போன்றவைகளில் குளிக்க செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு காவல் துறையில் இயங்கும் கைரேகை பிரிவு, மோப்ப நாய்ப்படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு பாரம்பரிய தற்காப்பு கலைகளான சிலம்பம், மான்கொம்பு போன்ற கலைகள் குறித்தும் வகுப்புகள் எடுக்கப்பட்டது.