போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர்
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில், அரியலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமை தாங்கினார். இதில் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, குட்கா மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் உடல்நல தீமை மற்றும் சமூக தீமை குறித்து, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் பள்ளி மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
Related Tags :
Next Story