விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
x

விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சேமிப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி கொடும்பாளூர், கசவனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வேளாண்மை அலுவலர் ஷீலாராணி வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் உள்ள இடுபொருட்கள் குறித்து பேசினார். மங்களநாயகி கலைக்குழுவின் நடராஜன் குழுவின் மூலம் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வேளாண்மை துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தென்னங்கன்றுகள், பேட்டரி தெளிப்பான், தார்ப்பாய்கள், பண்ணை கருவிகள், ஜிப்சம், உளுந்து விதைகள், சிங்க்சல்பேட், உயிர் உரங்கள் போன்ற இடுபொருட்கள் குறித்தும் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களை சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், நுண்ணீர் பாசனம், உழவன் செயலின் பயன்பாடு ஆகியவைகள் குறித்து கிராமிய பாடல்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் லெட்சுமிபிரபா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராஜா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உமாமகேஸ்வரி, ஆரோக்கியராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story