சங்கராபுரத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை, மீண்டும் மஞ்சப்பை, டெங்கு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மற்றும் பொதுசுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணிதாகப்பிள்ளை தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆஷாபீ ஜாகிர்உசேன், வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பஸ் நிலையத்தில் உள்ள நாடக மேடையிலும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story