சாராய விற்பனையை தடுக்க விழிப்புணர்வு பேனர்
காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி பேரூராட்சிகளில் சாராய விற்பனையை தடுக்க விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
கடந்த வாரம் விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி ஆகிய பேரூராட்சிகளின் அலுவலகங்கள், பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அதில் யாராவது கள்ளச்சாராயம் விற்றால் 10581 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story