வீடுகளுக்கு குப்பைகளை தரம் பிரிப்பதற்காக கூடைகள் வழங்கி விழிப்புணர்வு


வீடுகளுக்கு குப்பைகளை தரம் பிரிப்பதற்காக கூடைகள் வழங்கி விழிப்புணர்வு
x

வீடுகளுக்கு குப்பைகளை தரம் பிரிப்பதற்காக கூடைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் நகர்ப்புற தூய்மைப்படுத்தும் திட்டத்தில் குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் அனைத்து வீடுகளிலும் தினமும் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்கவும், அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்கள் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவதற்காகவும் 2 நிறங்களில் கூடைகள் முதற்கட்டமாக 800 வீடுகளுக்கு வழங்கப்பட்டது.


Next Story