விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம் நடந்தது
காரைக்குடி
கல்லல் வட்டாரம் மருதங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட மானகிரி கிராமத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி தாய்மார்களுக்கான சிறப்பு குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆலோசனைப்படி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் விஜய்சந்திரன், துணை இயக்குனர் குடும்ப நலம், டாக்டர் தர்மர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆல்வின் ஜேம்ஸ், முன்னிலையில் நடைபெற்றது. தளக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் பதின்பருவ திருமணங்கள் மற்றும் இளம் வயதில் கர்ப்பமடைதலை தடுத்தல், ஒரு குழந்தை பிறந்த பின்னர் குறைந்தது 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னரே அடுத்த குழந்தை பெற்று கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2 குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்கு ஆரோக்கியம், குழந்தைகளின் ஆரோக்கியம், குடும்ப பொருளாதாரம் மேம்படவும் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் 135-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.