டெங்கு தின விழிப்புணர்வு முகாம்
டெங்கு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள திருவிடையார்பட்டியில் பள்ளியின் அருகே சுகாதாரத்துறை சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமிற்கு திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டு ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், மழை நீர் எங்கு தேங்குகிறதோ அதில் ஏ.டி.எஸ். கொசுக்கள் உருவாகி அதன் மூலம் டெங்கு பரவுகிறது. பொது மக்கள் தங்களது வீட்டில் உடைந்த குடங்கள், டயர்கள், மண்பானைகள், தேங்காய் கொட்டச்சிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்குவதால் டெங்கு பரவுகிறது என்றும் அதன் மாதிரிகளை காண்பித்தும் விழிப்புணர்வு முகாம் நடத்தினார். அதிக அளவில் காய்ச்சல், மூட்டு வலி, கை,கால் வலி போன்றவைகள் டெங்குவின் அறிகுறிகளாக காணப்படுகிறது. இவ்வாறு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.