ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
பந்தலூர் அருகே ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே சேரம்பாடி சமுதாய கூடத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமை தாங்கி பேசும்போது, ஆட்டோக்களில் பயணிகளை பின்பக்க இருக்கையில்தான் அமர்த்த வேண்டும். முன்பக்கம் டிரைவர் அமரும் இருக்கையில் பயணிகளை அமர்த்தினால் அபாராதம் விதிக்கப்படும். அதிகமாக பயணிகளை ஏற்ற கூடாது. மது அருந்திவிட்டு ஆட்டோகளை இயக்க கூடாது. காக்கி சீருடை கண்டிப்பாக அணிய வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் போலீஸ் ஏட்டு சிஜூ உள்பட போலீசார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story