காப்பீடு திட்டங்களுக்கான விழிப்புணர்வு முகாம்


காப்பீடு திட்டங்களுக்கான விழிப்புணர்வு முகாம்
x

காப்பீடு திட்டங்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய காப்பீடு திட்டங்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற முகாமில், 349 பேர் தங்களை காப்பீடு திட்டத்தில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து, 3 சுய உதவி குழுக்களுக்கு ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் தொழில்கடனுக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொதுமேலாளர் அவினாஷ் உத்பால், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத் குமார், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத்தலைவர் சித்ராதேவி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story