பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளியை அடுத்த முத்தனப்பள்ளி பகுதியில் இயங்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் தென்மேற்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நீர் நிலைகள், தீ விபத்து போன்ற சம்பவங்களின்போது எப்படி தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்தும், பாதுகாப்பு உபகரணங்களை கையாள்வது, உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்கள், நீர்நிலைகளில் மூழ்கியவர்களை எப்படி உபகரணங்களை பயன்படுத்தி காப்பாற்றுவது என்பது உள்ளிட்டவை குறித்து விளக்கினர். இதில் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story