உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம்
உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கரூர் வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் தோட்டக்கலைத்துறை அலுவலர் செல்வகுமார், வேளாண்மை அலுவலர் ஜெயந்தி, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் நந்தகுமார், உதவி வேளாண்மை துறை அலுவலர்கள் சுந்தரவடிவேல் மற்றும் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறி பயிர்கள் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தும் திட்டங்கள் குறித்தும், உழவர் சந்தைகளின் பயன்கள் குறித்தும் விரிவாக எடுத்து வைத்தனர்.தொடர்ந்து உழவர் சந்தையின் அடையாள அட்டைகளை வழங்கி அதன் வழிமுறைகள் குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையினர் எடுத்துக் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.