தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்


தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
x

சாலகுப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சாலகுப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் வடகிழக்கு பருவமழை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் தீயணைப்பு நிலைய அலுவலர் மதியழகன் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியை சுடர்விழி வரவேற்றார்.

முகாமில் தீயணைப்பு துறையினர் கலந்துகொண்டு வடகிழக்கு பருவமழை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை செயல் விளக்கத்துடன் நடத்தினர்.

அப்போது நீச்சல் தெரியாதவர்கள் மழைக் காலங்களில் ஏரி, குளங்கள், குட்டைகள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது, மழை பெய்யும் போதும், இடி இடிக்கும் போதும் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அருகில் நிற்கக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கீழ்பென்னாத்தூர ்மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார். முடிவில் ஆசிரியர் சுகுமார் நன்றி கூறினார்.


Next Story