போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
x

ராசிபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ராசிபுரம் போலீஸ் சார்பில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-

போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளிகளில் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வளரிளம் பருவத்தினரை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிதல், போதைப்பொருட்கள் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன், பயிற்சி பெண் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா முகில் அகஸ்டினாள், ஆசிரியர்கள், போலீசார், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story