நம்ம ஊர் சூப்பர் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்


நம்ம ஊர் சூப்பர் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
x

நம்ம ஊர் சூப்பர் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

கரூர்

தோகைமலை ஒன்றியம், நாகனூர் ஊராட்சியில் நம்ம ஊர் சூப்பர் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா ராஜா தலைமை தாங்கினார். தோகைமலை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வைத்தார். இதில் விளையாட்டு மைதானம், குடிநீர் தொட்டி, தெருக்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து குக்கிராமங்களுக்கு வீடுவீடாக சென்று பிளாஸ்டிக் கேரி பைகளை ஒழிப்பது, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், ஒன்றிய ஆணையர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story