ரத்த தானத்தை வலியுறுத்தி சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம்


ரத்த தானத்தை வலியுறுத்தி சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம்
x

ரத்த தானத்தை வலியுறுத்தி சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

பெரம்பலூர்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த நீண்ட தூர சைக்கிள் பயண சாகச வீரர் ஜாய்தீப் ராவுத் (வயது 53). இவர் ரத்த தானம் அளிப்பதன் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை 2-வது முறையாக தேசிய கொடியுடன் சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டு, கொல்கத்தாவிற்கு திரும்பி சென்று கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக பெரம்பலூர் வந்த ஜாய்தீப் ராவுத்திற்கு பெரம்பலூரில் குருதிக்கொடை தன்னார்வலர்கள் சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் ரத்த தானம் பெறும் தன்னார்வ நிறுவனங்கள், ரத்த வங்கிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலை பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட் தெருவில் இருந்து உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்ட ஜாய்தீப் ராவுத்திற்கு பெரம்பலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் ஜெயராமன், குருதிக்கொடையாளர்கள் சங்கத்தின் தலைவர் நாகராஜ், இத்த வங்கியின் நிர்வாகி வீரமுத்து மற்றும் ரத்த தான தன்னார்வலர்கள் சால்வை அணிவித்து வழி அனுப்பி வைத்தனர்.


Next Story