சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் டிரைவர்களை ஒருங்கிணைத்து சாலையில் இடது புறமாக செல்வது குறித்து அரை மணி நேரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி, திருப்புட்குழி போன்ற இடங்களில் நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், பஸ்கள், மினி லாரி, வாடகை வாகனங்கள் அனைத்தையும் ஒன்றாக அணிவகுக்க செய்து டிரைவர்களை ஒருங்கிணைத்து சாலையில் இடது புறமாக செல்வது குறித்து அரை மணி நேரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் இடது புறமாக செல்வது குறித்த நன்மைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், பாலுச்செட்டிசத்திரம் போலீசார், போக்குவரத்து கழக அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story