மின்சார வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வு பிரசாரம்


மின்சார வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 4 Jun 2023 1:00 AM IST (Updated: 4 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பொள்ளாச்சி கோட்டம் சார்பில் பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செயற்பொறியாளர் ராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் வாகனங்களுடன் ஒப்பிடும்போது மின்சார வாகனங்களின் பராமரிப்பு செலவுகள் குறைவாகும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வாகன மூலம் பிரசாரம்

தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கிறது. எனவே பொதுமக்கள் மழைக்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். மின்சார ஒயர்கள் அறுந்து கிடந்தாலும், சேதமடைந்த மின் கம்பங்கள் இருந்தாலும் பொதுமக்கள் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி எல்.இ.டி. திரை பொருத்திய வாகனத்தின் மூலம் காணொலி வாயிலாகவும், மற்றொரு வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலமாகவும் பொள்ளாச்சி நகரம் முழுவதும் வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு மின்சார வாகனங்களின் அவசியம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொணடனர்.


Next Story