வனஉயிரின வார விழாவையொட்டி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்


வனஉயிரின வார விழாவையொட்டி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்
x

வனஉயிரின வார விழாவையொட்டி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

பெரம்பலூர்

தமிழ்நாடு வனத்துறை திருச்சி மண்டலம் பெரம்பலூர் வனக்கோட்டம் மற்றும் பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் வனஉயிரின வாரவிழா அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கலைப்போட்டிகள் வேளாண்மை கல்லூரியில் நடந்தது. இதில் 6-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் என பள்ளி மாணவர்களுக்கு 3 பிரிவாக ஓவியம், கட்டுரை, வினாடி-வினா, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. வனஉயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு மற்றும் அவசியம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகளும், மனித-வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சுப்போட்டிகளும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன உயிரினம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டிகளும் தனித்தனியே நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன், பேராசிரியர் முத்து விஜயராகவன், வனவர் குமார் மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் செய்திருந்தனர்.


Next Story