விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
x
திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலைய நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் உலக சைக்கிள் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தொடங்கிய ஊர்வலம் நத்தம் சாலை, மாலப்பட்டி ரோடு வழியாக சென்று மீண்டும் தொழிற்பயிற்சி நிலையம் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் சைக்கிளை ஓட்டி சென்றனர். அப்போது அனைவரும் கட்டாயமாக சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் உடல் ஆரோக்கியம் பெறும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை சைக்கிளின் முன்பகுதியில் வைத்திருந்தனர். இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயக்குமார், உடற்பயிற்சி அலுவலர் அழகர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story