பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப்போட்டிகள்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப்போட்டிகள்
x

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது.

வேலூர்

வேலூர்

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு போட்டிகள்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நேற்று வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

போட்டியை ஆசிரியர் வாரா, இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் ஓவிய ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர். போதை பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் போட்டிகளை கண்காணித்தார்.

இந்த போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியப்போட்டியில் 64 பேரும், பேச்சுபோட்டியில் 50 பேரும், கட்டுரை போட்டியில் 37 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

பரிசுகள்

போதை பொருட்களினால் ஏற்படும் விளைவுகள், தனிமனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு, சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ற தலைப்புகளில் மாணவர்கள் ஓவியங்கள் வரைந்து அசத்தினர்.

இந்த 3 போட்டிகளில் தேர்வு செய்யப்படும் 27 பேருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசுகள் வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story