சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்குவது குறித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்குவது குறித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 23 Aug 2023 1:00 AM IST (Updated: 23 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்குவது குறித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

இந்தியாவில் சார்பில் நிலவிற்கு சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலாவில் தரை இறங்குவதாக இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த நேரத்தை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் நேரத்தை குறிக்கும் வகையில் தரையில் அமர்ந்து இருந்தனர். மேலும் சந்திரயான்-3 தரையிறங்கும் தருணங்களை தொலைக்காட்சி வழியாக பார்த்து மகிழவும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story