திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு


திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
x

திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

திருச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி ரெயில்வே கோட்டத்தில் 380 போலீசார் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு ரெயில் நிலையங்களில் ஆய்வு நடத்த திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் திருச்சி ரெயில் நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் பயணிகளிடம் காவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார். தொடர்ந்து ரெயில் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு மற்றும் வெடி பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.


Next Story