ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு


ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 13 Jan 2023 6:35 PM GMT (Updated: 14 Jan 2023 10:26 AM GMT)

ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் தலைமையிலான போலீசார், அரியலூர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகளிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் இணைய வழி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அரியலூர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகளிடம் இணைய வழியில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், இணையத்தை எவ்வாறு கையாள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story