விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x

பாளையங்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

திருநெல்வேலி

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு எச்.ஐ.வி. மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. நெல்லை பயிற்சி உதவி கலெக்டர் கிஷன் தொடங்கி வைத்தார். இதில் நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் சக்கரவர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் வெள்ளியப்பன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் அமலவளன், திட்ட மேற்பார்வையாளர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான தூரம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஐகிரவுண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, சீனிவாச நகர் வழியாக மீண்டும் மைதானம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் மாணவர் பிரிவில் அஜித்குமார், முத்து இசக்கி, சீனிவாசன் ஆகியோர் முதல் 3 இடத்தையும், மாணவிகள் பிரிவில் முப்பிடாதி, மந்திரம் என்ற பார்வதி, ராமலட்சுமி ஆகியோர் முதல் 3 இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் 7 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.


Next Story