விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், சுதந்திர அமைப்பு ஓட்டத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 75 ஆண்டுகள் சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, பாரதிதாசன் 4-வது தெரு வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது. இதில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story