விழிப்புணர்வு ஊர்வலம்


விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் கிருங்காகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலத்திற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சத்திய நேசன், சுகாதார ஆய்வாளர்கள் சாத்தன், சுந்தரேஸ்வரன், எழில்மாறன் மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தானாபாய், ஆசிரியர்கள் சரண்யா, சொர்ணவள்ளி, அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மக்கள் தொகை கட்டுப்படுத்தி இந்த உலகை காப்போம், மக்கள் தொகை பெருக்கம் சிக்கலை பெருக்கும், திட்டமிட்ட குடும்பமே திகட்டாத இன்பம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். கிருங்காகோட்டை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று பள்ளியை அடைந்தது.

இதில் செவிலியர்கள் மற்றும் மஸ்தூர் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story