சர்வதேச காது கேளாதோர் வார விழிப்புணர்வு ஊர்வலம்


சர்வதேச காது கேளாதோர் வார விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு மருத்துவமனையில் சர்வதேச காது கேளாதோர் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தர்மபுரி

சர்வதேச காதுகேளாதோர் வாரத்தை முன்னிட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்வேறு வார்டுகள் வழியாக சென்றது. இதில் துணை முதல்வர் சாந்தி, மற்றும் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காது, மூக்கு, தொண்டை பிரிவு துணைத்தலைவர் செந்தில் குமரன் பேசுகையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்- அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,500 பேருக்கு காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பிறவியிலேயே காது கேளாத 26 குழந்தைகளுக்கு காக்களியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.


Next Story