ஓசூரில் சிறுவர், சிறுமிகள் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஊர்வலம்


ஓசூரில் சிறுவர், சிறுமிகள் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உலக நடைபயிற்சி தினத்தையொட்டி ஓசூரில் சிறுவர், சிறுமிகள் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர் :

உலக நடைபயிற்சி தினத்தை முன்னிட்டு மாவட்ட சிலம்ப சங்கம் சார்பில், நேற்று ஓசூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜ் தொடங்கி வைத்தார். இதில், சிறுவர், சிறுமிகள் சிலம்பம் சுற்றியவாறு 3. கி.மீ தூரம் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஓசூர் ராயக்கோட்டை சாலையில், அசோகா சர்க்கிள் அருகே நிறைவடைந்தது. இதில், சங்க நிர்வாகிகள், சிறுவர் சிறுமிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலையில் சிறுவர், சிறுமிகள் சிலம்பம் சுற்றியவாறும், சாகசம் செய்தும் சென்றது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

1 More update

Next Story