கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்


கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 19 March 2023 11:19 AM GMT (Updated: 2023-03-19T16:50:08+05:30)

ஆரணியில் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாநில தலைவர் த.விஜயகீர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சா.அரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் கு.அரிகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சின்னசாமி, செயலாளர் பெருமாள், பொருளாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி வட்டார தலைவர் கோபி வரவேற்றார்.

அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியான மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, ஆரணி-வேலூர் நெடுஞ்சாலை வழியாக ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பாக முடிந்தது. பின்னர் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகள் வாங்கும் கடனை 6 மாதம் என்பதனை ஒரு வருடமாக உடனடியாக நீட்டிப்பு செய்ய வேண்டும்.

கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொடுக்கும் கடனை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் உயர்த்த வேண்டும். நேரடி நெல் கொள்முதல் இல்லாத கிராமங்களுக்கு நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தை நிறுவ அரசு முன்வர வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story