விழிப்புணர்வு கூட்டம்


விழிப்புணர்வு கூட்டம்
x

விழிப்புணர்வு கூட்டம் நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வளா் இளம் பெண்களுக்கான விழிப்புணா்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளா்கள் சிவகாமி, பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் தமிழ்வாணி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து ஊட்டச்சத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை, தன்சுத்தம், சத்தான உணவுகளின் அவசியம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார திட்ட உதவி அலுவலா் சண்முகசுந்தரி மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் அங்கன்வாடி பணியாளா் லதாபேபி நன்றி கூறினார்.


Next Story