விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்


விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் மக்கள் பாதை ஊழல் எதிர்ப்பு தமிழ் போராளிகள் சார்பாக விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வக்கீல் ஜான் சேவியர் தலைமை தாங்கினார்.

மாநில விவசாய சங்க தலைவர் மதுரை வீரன், சாலைக்கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வக்கீல் ஜான் சேவியர் பேசியதாவது, வறட்சியான காலகட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களையும், இனிவரும் காலங்களில் விவசாயிகள் விழிப்புடன் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றியும் விளக்கம் அளித்தார்.

பரமக்குடி வக்கீல் பசுமலை, வேந்தைசிவா, நயினார்கோவில் விவசாய சங்க நிர்வாகி ரத்தின சபாபதி ஆகியோர் விவசாயிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள். இதையடுத்து விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வக்கீல் ஜான் சேவியர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story