விழிப்புணர்வு கூட்டம்


விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:34 AM IST (Updated: 11 Jan 2023 3:23 PM IST)
t-max-icont-min-icon

பறவைகள் கணக்கெடுப்பு 2023 பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் இயற்கை கழகம் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு 2023 பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இயற்கை கழக ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி வரவேற்றார். முதல்வர் வெங்கடேஸ்வரன் வாழ்த்தி பேசினார். கல்லூரி இயற்கை கழக பறவை ஆர்வலர் விஷ்ணு சங்கர் பறவைகளை எவ்வாறு கண்டறிவது, பறவை பட்டியலை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி கூறினார். இந்த வருடம் பறவைகள் கணக்கெடுப்பு 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என்பதை தெரிவித்தார். இதனை அடுத்து கல்லூரி பறவைகள் உலா நடைபெற்றது. முடிவில் கணிப்பொறியியல் பேராசிரியர் நன்றி கூறினார். இந்தநிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் அமைப்பு தலைவர் சரண் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story