குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்


குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:15:45+05:30)

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு இளையான்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஊர்க்காவலன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நாகராஜ், கிராம ஊராட்சி ஆணையாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் ஜான் சேவியர் பிரிட்டோ, பெண் குழந்தைகளுக்கு பாலியல் சம்பந்தமான குற்றங்களை தடுப்பது சம்பந்தமாகவும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் உருவாவதை தடுப்பது சம்பந்தமாகவும், குழந்தைகள், மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

இதில், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், மற்றும் குழந்தைகள் நல காப்பாளர்கள், குழந்தைகள் நல அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story