குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பாதுகாப்பு குழந்தை நல பணியாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சிவகாமி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் சண்முக சுந்தரி முன்னிலை வகித்தார். சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜானகி வரவேற்றார்.
குழந்தைகளை தவறாது பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி இடைநிறுத்தமான குழந்தைகளின் விவரங்களை பெற்று அவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு வரும் கல்வியாண்டில் தொடர்ந்து கல்வியை மேற்கொள்ள செய்ய வேண்டும்.
வட்டார, கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும். போதை ஒழிப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், ஒன்றிய அலுவலக பணியாளர்கள், குழந்தைகள் நல பாதுகாப்பு பணியாளர்கள், சமூக நலத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.