ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்


ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
x

தா.பழூரில் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கான சைபர் குற்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்யராஜ் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட சைபர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் வாணி, தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவனேசன் ஆகியோர் அடங்கிய சைபர் குற்றப்பிரிவு போலீசார் இணைய வழியில் நடைபெறும் பல்வேறு ஆன்லைன் குற்றங்கள் குறித்து விளக்கி பேசினர். மொபைல் போன்கள் பயன்படுத்தும் போது அதில் நடைபெறும் இணைய வழி குற்றங்களுக்கான வாய்ப்புகள் குறித்தும், இணைய வழியில் வரும் இலவச சலுகைகள் உள்ளிட்ட போலி விளம்பரங்களை கண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்புகளை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் இழப்புகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இணையதளம் மூலம் ஏமாற்றுக்காரர்கள் எப்படி சாமானியர்களை ஏமாற்றுகிறார்கள், அதில் இருந்து தப்பிப்பது எப்படி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை விளக்கி கூறினர். கூட்டத்தில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா நன்றி தெரிவித்து பேசினார்.


Next Story