காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்


காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
x

வாணியம்பாடியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் "இமைகள் திட்டம்" மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வாணியம்பாடியில் ஜனதாபுரத்தில் உள்ள எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அவர் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி, குழந்தை திருமணம் குறித்தும் மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பழனி, மலர், கருணை இல்ல நிர்வாகி டேவிட் சுபாஷ்சந்திரன், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story