அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்


அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:45 PM GMT)

கயத்தாறு அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மக்கள் சேவை இளைஞர் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சாய்லிங்கா அறக்கட்டளை சார்பில் இந்த கூட்டம் நடைபெற்றது. மாணவன் மூர்த்தி வரவேற்று பேசினார். அறக்கட்டளை தலைவர் உமையலிங்கம் சிறப்புரையாற்றினார். குழந்தைகள் நல ஆலோசகர் சுரேத்துவாணி குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளர், போதை பொருள் தடுப்பு பற்றிய பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுப்புராஜ் வாழ்த்துரை வழங்கினார். குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஆலிவ்சிந்தியா, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாணவி சாரதா நன்றி கூறினார்.


Next Story