டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு கூட்டம்


டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு கூட்டம்
x

கரிவேடு ஊராட்சியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு ஊராட்சியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மகளிர் உதவி திட்ட அலுவலர் அன்பரசு தலைமை தாங்கினார். ஓச்சேரி இந்தியன் வங்கி துணை மேலாளர் யுகேந்தர், வட்டார ஒருங்கிணைப்பாளர் பாக்கியவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கரிவேடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தாஸ் கலந்துகொண்டார். கூட்டத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கீதா நாகராஜ், பி.எல்.எப். ஊழியர் அமுதா, ஊராட்சி செயலர் வில்விஜயன் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


Next Story