கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்


கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
x

கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை சார்பில் வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட கூட்டம் மற்றும் பணமில்லாபரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கரூர் வட்டார கள மேலாளர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார்.கரூர் சரக மேற்பார்வையாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். ஐஓபி முதன்மை வங்கி நிதிசார் கல்வி ஆலோசகர் ராஜேந்திரன், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று கணக்கு தொடங்கி எவ்வாறு பயன்படுத்திகொள்வது, கடன் பெற்றால் கடனை உரிய காலத்தில் திருப்பிசெலுத்துவது மற்றும் நிதிசார் கல்வி திட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனை பற்றியும், ஆர்டீஜிஎஸ் மற்றும் நெப்ட், மொபைல் பேங்கிங் பற்றியும் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் பெறுவது எப்படி மற்றும் மைக்ரோ ஏ.டி.எம். பயன்பாடு குறித்து விளக்க உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பணியாளர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story