வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணா்வு கூட்டம்


வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணா்வு கூட்டம்
x

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடந்தது.

கரூர்

தோகமலையில் சமூக கம்பளத்து நாயக்கா் சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் ராஜாமணி, முருகன், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில், தரமான கல்வி வழங்குதல், உடல் சம்பந்தமான குறைபாட்டை, சரி செய்தல், சுய தொழில் மேம்படுத்துதல், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல் உள்ளிட்டவற்றை குறித்து ஆச்சம்பட்டி, வாலியம்பட்டி நாயக்கர் இனமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story