பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்


பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
x

திருவண்ணாமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, புதுச்சேரி மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதேகொம் பின்னகம், உமன் என்பவர்மெண்ட் டிரஸ்ட் ஆகியவை இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை குறைத்தல், தடுத்தல், தீர்வு காணுதல் என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது.

கூட்டத்திற்கு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கையாள வேண்டும், அவற்றை எவ்வாறு குறைத்து விரைந்து தீர்வு காண வேண்டும் என்பன போன்று பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை, மகளிர் உரிமைத்துறை, நீதித்துறை மற்றும் காவல் துறையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story