கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு


கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
x

கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் நடந்தது. கல்லூரி மாணவ-மாணவிகளிடையே சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவமீனா (தொழில்நுட்பம்) ஆகியோர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏ.டி.எம். கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏ.டி.எம். கார்டு மற்றும் ஒ.டி.பி. எண் பகிரக்கூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, இ-பைக் டீலர்ஷிப், கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், கிரிப்டோ கரன்சி மோசடி, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்களில் தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது, ஆன்லைன் விளையாட்டு, தேவையில்லாத அப்ளிகேசன் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story