பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு


பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 15 April 2023 11:56 PM IST (Updated: 15 April 2023 11:59 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வாரம் "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்" என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நேற்று முன்தினம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு வாரத்தின் 2-வது நாளான நேற்று நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பெரம்பலூரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு தீ விபத்து, பேரிடர்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்க உள்ளனர்.


Next Story