பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவியின் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீசார் நடத்தினர். அப்போது போலீசார் மாணவ-மாணவிகளிடையே பேசுகையில், போக்குவரத்து விதிகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வர வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி நடந்தால் விபத்துகள் ஏற்படுவது குறையும். மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண்கள் 181, 112 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், முதியோர் உதவி எண் 14567 குறித்தும், சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்தும் மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.